Nadar Higher Secondary School Kovilpatti
Nadar Higher Secondary School Kovilpatti
 
 
 
 Conduct And Discipline
 

பள்ளிக்கு வருகை பற்றிய விதிகள்

RULES OF ATTENDANCE

  • பள்ளி வேலை நேரம் : FN : 9.30 - 12.40 AN : 1.30 - 4.20

  • மாணவர்கள் தினமும் பள்ளி தொடங்குவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பாக வரவேண்டும். பள்ளி தொடங்கி தாமதமாய் வருகிறவர்கள் உதவி தலைமையாசிரியரிடம் இக்கையேட்டில் தாமதப் பதிவு செய்து ஒப்புதல் பெற்றுத்தான் வகுப்பிற்குள் செல்ல வேண்டும். மாணவர்கள் இக் கையேட்டை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

  • விடுப்பு (Leave) வேண்டியவர்கள், முன்னதாகவே தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையப்பத்துடன் விடுப்பு விண்ணப்பம் கொண்டு வந்து வகுப்பு ஆசிரியரிடம் காண்பித்து அனுமதி பெற்ற பின்னரே விடுப்பு எடுக்கலாம்.

  • பள்ளிக்கு முன் அனுமதியின்றி வருகை தராதவர்கள், மறுபடி வரும் போது தலைமையாசிரியரிடம் இக்கையேட்டில் பதிவு செய்து ஒப்புதல் பெற்றுத்தான் வகுப்பிற்குச் செல்ல வேண்டும்.

  • 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் இருசக்கர வாகனங்களில் வருகைதர அனுமதியில்லை. 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வருகை தர ஓட்டுநர் உரிமம் தேவை.

    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


    மாணவர் விடுதி (HOSTEL ANNEXURE)

  • இப்பள்ளியுடன் இணைந்த மாணவர் விடுதி மாணவர்களுக்காக மட்டும் (Boys Only) நடத்தப்பட்டு வருகின்றது.

  • விடுதியை, கண்காணிப்பாளர்களும் (Warden), இரண்டு உதவிக் கண்காணிப்பாளர்களும் (Warden), மேலாளரும் (Manager) கவனித்து வருகிறார்கள்.

  • மாணவர்களுக்குரிய மாதந்திர உணவுக் கட்டணம் பங்கீட்டு முறையில் (Dividing Sysytem) கணக்கிடப் படுகிறது.

  • விடுதியில் சேரும் மாணவர்கள் விடுதியுடன் சட்டதிட்ட, விதி முறைகளைக் கண்டிப்பாய் கடைப்பிடிக்க வேண்டும்.விடுதியில் அளிக்கப் படும் வாய்ப்புகளையும் வசதிகளையும் நன்கு பயன் படுத்தி முழு அறிவு வளர்ச்சி பெற்றிட ஒத்துழைக்க வேண்டியது மாணவரின் தலையாய கடமையாகும்.

    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒழுங்குமுறை விதிகள்

(CODES OF DISCIPLINE)

  1. தினமும் நடைபெறும் பொது வழிபாட்டில் (Assembly) எல்லா மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும்,யாவரும் தமிழ்த்தாய் வாழ்த்து, பள்ளிப்பாடல், கொடிப் பாடல், உறுதி மொழி, தேசிய கீதம் இவற்றை அறிந்திருக்க வேண்டும்.

  1. ஒவ்வொரு மாணவரும் தினமும் பள்ளிச் சீருடை (School uniform) அணிந்தே பள்ளிக்கு வருகை தர வேண்டும்.

  1. ஆங்கில வழியில் பயிலும் மாணவ, மாணவிகள் Block colour shoe & Socksகண்டிப்பாக அணித்து வர வேண்டும் தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

  1. உடற்கல்வி பாடவேளைக்கு வரும் 6 முதல் 10 வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அரைகால் சட்டை,பனியன் அணிந்து வர வேண்டும்.

  2. பள்ளிக்குள் ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களை முதல் தடவை பார்க்கும் போது, மாணவர்கள் ஆசிரியர்களை வணகுதல் வேண்டும்.

  3. வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தவுடன் மாணவர்கள் எழுந்து நிற்றல் வேண்டும்.ஆசிரியர்,மாணவர்களை அமரும்படி கூறிய பின்னரே மாணவர்கள் தத்தமது இடத்தில் அமர வேண்டும்.

  4. எந்த மாணவரும் வகுப்பு ஆரம்பித்த பிறகு ஆசிரியரின் அனுமதியின்றி உள்ளே வந்து வகுப்பில் கலந்து கொள்ளலாகாது.

  5. வகுப்பு முடிவதற்குள் எந்த மாணவரும் ஆசிரியரின் அனுமதியின்றி வெளியே செல்லக் கூடாது.

  6. ஒவ்வொரு மாணவரும் தனக்கென்று குறிப்பிட்ட இடத்திலேயே அமர்தல் வேண்டும்.

  7. ஒரு வகுப்பிலிருந்தே மற்றொரு வகுப்பறை, விளையாட்டு மைதானம், ஆய்வறைக்கு செல்லும் பொழுதும், திரும்ப வரும் பொழுதும், மாணவர்கள் வரிசையாக அமைதியுடன் செல்லுதல் வேண்டும்.

  8. வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது மாணவர்கள் பள்ளி வளாகத்தினுள் சுற்றித் திரியக் கூடாது. வராண்டாவின் வழியாக எவ்வித போக்குவரத்தும் வைத்துக் கொள்ளக் கூடாது. ஆங்காங்கே உள்ள படிக்கட்டு வழியாகவே ஏறி இறங்க வேண்டும்.

  9. கட்டட சுவரில் எழுதல், மை ஊற்றுதல், தரையில் காகிதத்தைக் கிழித்தேறிதல், சுவரில் கால்களைப் பதித்தல், மரத்தின் இலைகளைப் பறித்தல் போன்ற பள்ளிக்கூட வளாகத்தை மாசு படுத்தும் முறைகேடான செயல்களைச் செய்யக் கூடாது. மீறுபவர்கள் தலைமை ஆசிரியர் விதிக்கும் அபராதத் தொகையைக் கட்ட வேண்டும்.

  1. அங்கிகாரம் பெறாத புத்தகங்கள் (Notes & Guides, Cell Phone, CD), தடை செய்யப்பட்ட பொருள்கள் முதலியவற்றை எந்த மாணவரும் வகுப்பறைக்குள் கொண்டு வரக் கூடாது.

  1. தமது செய்கையும், நடத்தையும், பண்பும், கட்டுப்பாடும், தமக்கும் தமது பள்ளிக்கும் நற்பெயர் நின்று நிலவும் முறையில் அமைய வேண்டும்.

  1. அரசாங்க விதிகளுக்கு மாறானதோ, பள்ளி விதிகளுக்கு புறம்பானதோ, கீழ்ப்படியாமையை உண்டாக்குவதோ ஆகிய எந்த கிளர்ச்சியிலும் மாணவர்கள் ஈடுபடக்கூடாது.பள்ளியின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும் எச்செயலிலும் ஈடுபடும் மாணவர்கள் ஒழுங்கு சபை (Displinarty Commitee) யின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.

    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அறிவியல் ஆய்வுக் கூட ஒழுங்கு விதிகள்

(Science Laboratory)

  • மாணவர்கள் ஒழுங்கான முறையில் அறிவியல் கூடத்தினுள் சென்று அவரவர் இடத்தில் அமர வேண்டும்.

  • ஆய்வுக்கூடத்தினுள் ஆழ்ந்த அமைதி நிலவ வேண்டும்.

  • காரணமின்றி இடம்விட்டு இடம் நகரக் கூடாது.

  • இரசாயணப் பொருள்களையும் விஞ்ஞான உபகரணங்களையும் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.

  • செய்முறை பயிற்சியின் போது அருகில் உள்ள மாணவர்களுடைய ஆய்வுப் பொருள்களை வாங்கக் கூடாது

  • அவசியமின்றி விஞ்ஞான பொருள்களைத் தொடவோ வேறு இடங்களில் வைக்கவோ கூடாது.

  • செய்முறை பயிற்சிக்கு வருவதற்கு முன்னரே தங்களுக்கு கொடுக்கப் படும் உபகரணப் பொருள்களைச் சரி பார்த்து ஒப்புக் கொள்ள வேண்டும் .

  • தமக்கு தரப்படும் உபகரணப் பொருள்கள் சேதமடைந்தால் அதனை ஆய்வகப் பொறுப்பாசிரியரிடம் தெரிவித்து, வேறு உபகரணப் பொருள்களைப் பெற்று கொள்ளலாம்.

  • சேதமடைந்த போருல்கல்குரிய மதிப்பு அந்தந்த மாணவரிடமிருந்து வசூலிக்கப்படும் .

  • தமக்குக் கொடுக்கப் பட்ட உபகரணங்களைக் கொண்டே செய்முறைப் பயிற்சி செய்யவேண்டும் .

  • கண்டறிந்த ஆய்வுக் கருத்துகளையும், உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் .

  • ஐயப்பாடுகளை அறிவியல் பொறுப்பாசிரியர்களிடம் கேடு தெளிவடைந்து கொள்ள வேண்டும் .

  • ஆய்வக மேஜை மற்றும் ஆய்வகத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  • செய்முறை பயிற்சி முடிந்த பின்னர் அவசியமானால் அவசியமானால் உபகரணங்களை சுத்தம் செய்து, சரியான நிலைமையில் ஒப்படைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும்.

  • ஏகக்ரணம் கொண்டும் ஆய்வுக் கூடத்திற்குரிய எப்பொருள்களையும் வெளியில் எடுத்துச் செல்லக் கூடாது.

    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பள்ளி நூலகம் (Library)

நமது பள்ளி நூலகத்தில் பயன் தரும் நூல்கள், மாணவர்களின் அறிவுத் திறன் வளர்ச்சிக்காக ஏராளமாக உள்ளன

நூலக ஒழுங்கு விதிகள்

  1. மாணவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகம் மட்டும் தன பெற்றுக் கொள்ளலாம்

  2. புத்தகம் எடுப்பதற்கு மாணவர்கள் நூலக அட்டையை உடன் கொண்டு வர வேண்டும் .

  3. நூலக அட்டையில் நூலகப் பொறுப்பாளரிடம் பதிவு செய்து, புத்தகம் பெற்றுக் கொள்ள வேண்டும்

  4. நூலகப் புத்தகங்களை பாத்து நாள்களுக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்

  5. நூலகத்தில் பெற்ற புத்தகங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.மாணவர்கள் பேனா, பென்சில் வைத்துப் புத்தகத்தில் குறித்தல் வேண்டும்

  6. தாமதமாக ஒப்படைக்கப் படும் புத்தகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 1/- வீதம் அபராதமாக வசூலிக்கப்படும்.

  7. நூலகப் புத்தங்களை சேதப் படுத்திய அல்லது தவறவிட்ட மாணவர்கள் புத்தகதிற்குரிய விலையை அபாரதத்துடன் செலுத்தி விட வேண்டும்.

  8. கீழ்க் குறிபிட்ட அட்டவணைப் படி, மாணவர்கள் நூலகத்தில் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    Class Day
    VI, VII Monday
    VIII, IX Tuesday
    X Wednesday
    XI Thursday
    XII Friday
-------------------------------------------------------------------------------------------------------------
 
         
About NHSS

Nadar Higher Secondary School was started as a Primary School in the year 1949, by the hard efforts of Mr. S.S.T. Rathinasamy Nadar, President, Kovilpatti Nadar Uravin Murai Sangam (1949 to 1955).

Evolution of Nadar Higher Secondary School Kovilpatti into a world class school, producing the finest school-graduates to serve and lead the advanced society of tomorrow.
  Useful Links

» Home
» History
» Management
» News & events
» Curriculam
» Activities
» Facilities
» Faculties
» Achievements
» Gallery
» Alumni
» School  Rules
» Contact us
» Sitemap
  Our Location

Nadar Higher Secondary School Map Address Kovilpatti
         

© Copyright. All Rights Reserved. | Nanotech Web Solutions India Private Limited
Disclaimer: None of the images on this site may be reproduced in any way, for any reason, without prior written permission