கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்கத் தலைவராக 3-6-1949 முதல் 19-6-1955 வரை பணியாற்றி திருS.S.T.இரத்தினசாமி நாடார் அவர்களின் முயற்சியினால் உறவின் முறைப் பெரியோர்களின் ஆசியுடன் நாடார் ஆரம்பப்பள்ளி தொடங்கப்பட்டது.
1955 இல் நாடார் உறவின் முறைச் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற திருM.S.M.இரத்தினசாமி நாடார் அவர்கள் கோவில்பட்டி வாழ் மக்கள் உயர் கல்வி பெற வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக 1956 ஆம் ஆண்டு கோவில்பட்டி பாரதி நகரில் நாடார் உயர்நிலைப் பள்ளி கட்டுவதற்கு 36 ஏக்கர் நிலம் வாங்க உறுதுணையாக இருந்தார்கள்.
நாடார் உயர் நிலைப்பள்ளி 10.6.1960 ஆம் ஆண்டு உருவானது. கோவில்பட்டி நகரில் தொடங்கப் பட்ட முதல் தனியார் பள்ளி இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. நாடார் மேல்நிலைப்பள்ளி 8-7-1960 இல் கல்வி வள்ளல் பெருந்தலைவர் K.காமராஜர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பள்ளியின் முதல் தாளாளர் திரு ஈ.வே.அ. வள்ளிமுத்து அவர்கள் ஆவார். தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் கனம் K.S.P. சண்முகவேல் நாடார் அவர்கள் 12.6.1964 ஆம் ஆண்டு புதிய வகுப்பறைக் கட்டங்களைத் திறந்து வைத்தார்கள்.
இப்பள்ளி 30.6.1978 வரை 9,10,11 வகுப்புகளுடன் செயல்பட்டது. பிறகு 1.7.1978 முதல் மேல்நிலைப்பள்ளியாக உயர்வு பெற்றது.
வெளியூர் மாணவர்கள் தங்கிப் பயில்வதற்கு வசதியாக 1978 ஆம் ஆண்டு மாணவர் விடுதி ஒன்று தொடங்கப்பட்டு சீரிய முறையில் நடைபெற்று வருகிறது.
மேலும் 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தமிழ் மற்றும் ஆங்கிலம் போதனா மொழிகளைக் கொண்டு இரு பலர்களும் கற்கும் வகையில் செயல் பட்டு வருகிறது.
1987-88 ஆம் ஆண்டு முதல் கணிப்பொறி அறிவியல் பிரிவு நவீன கணிப்பொறி வசதிகளுடன் ஆரம்பிக்கப் பட்டது.
1997-98 முதல் "Electric Motor Rewinding” பிரிவு தொடங்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. 13-6-1994 இல் பள்ளியின் புதிய மேல்மாடிக் கட்டடம் முன்னாள் தாளாளர் திரு S.S.D.கிருஷ்ணமூர்த்தி B.com., அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
2002-05 ஆம் ஆண்டு கல்வியாண்டுகளில் அப்போதைய உறவின் முறைத் தலைவர் திரு M.கருப்பசாமி நாடார் அவர்கள் தலைமையில் செயலாளர் திரு N.வெங்கடாசலபதி அவர்களின் முயற்சியில் ரூ.30 லட்சம் ரூபாய் செலவில் கூடுதலாக மாடியில் 13 வகுப்பறைகள் கட்டப்பட்டன. மாவட்ட ஆட்சியர் திரு க. இராஜாராம் அவர்களால் திறந்து வைக்க பட்டது. பள்ளியின் வடபுறம் சுற்றுச்சுவர் சுமர்ர் ரூ . 3 இலட்சம் செலவில் கட்டப்பட்டது. ரூ. 1 1/2 இலட்சம் செலவில் வேதியியல் ஆய்வகம் நிர்வாகத்தின் சார்பாக நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
“அறிவுடையார் எல்லாம் உடையார்" என்ற பொன்மொழியை உடைய இப்பள்ளி 1985 ஆம் ஆண்டு வெள்ளி விழாக் கண்டது. இப்பள்ளியில் 2500 மாணவ மாணவிகளும், 100 ஆசிரிய, அலுவலர்களும் பணியாற்றுகின்றனர்.
2004-05 ஆம் கல்விஆண்டு முதல் VI ஆம் வகுப்பிலிருந்து மாணவ, மாணவியர் தமிழ் வழியில் பயிலுவதற்கு அனுபதிக்கப்படுகிறார்கள்.
இப்பள்ளியில் பல்வேறு துறை சார்ந்த 10000 நூல்களுடன் கூடிய நூலகம், கேள்வி - காண் கல்வி, மாணவர் வங்கி, இலக்கிய மன்றம், அறிவியல் மற்றும் கணித மன்றம், வரலாற்று பண்பாட்டு மன்றம், உடற்கல்வி துறை போன்றவை சிறப்பாக செயல் பட்டு வருகிறது. தேசிய மாணவர் படை, நட்டு நலப்பணித் திட்டம், சாரணர் இயக்கம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், பசுமைப் படை, நுகர்வோர் மன்றம், சாலை பாதுகாப்பு படை போன்ற பல்வேறு சேவை அமைப்புகளும் சிறப்பாக செயல் பட்டு வருகின்றது.
பெற்றோர் ஆசிரியர் கழகம், பழைய மாணவர் சங்கம் மற்றும் தமிழக அரசின் சத்துணவு திட்டம் ஆகியவை சிறப்பாக செயல் பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம், ஆண்டு விழாவில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மாவட்ட அளவில் ரேங்க் எடுக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்,மாணவியர்களை அந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளி நிர்வாகமே தத்து எடுத்துக்கொள்கிறது என்பது சிறப்புக்குரிய விஷயம், மாநில அளவில் ரேங்க் பெரும் மாணவ, மாணவியர்க்கு ரூபாய் 1,00,000/- ரொக்கப்பரிசு வழங்க நாடார் உறவின் முறைச் சங்கத் தலைவர் திரு A.P.K பழனிசெல்வம் அவர்கள் மனம் உவந்து அறிவித்துள்ளனர்.
நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் திரு A.P.K பழனிசெல்வம் அவர்களின் முயற்சியில் 12 புதிய வகுப்பறைகளைக் கொண்ட, "காமராஜ் கல்வி வளாகம்" திறக்கப்பட்டது. அதில், 4 வகுப்பறைகளில் Smart Class மூலம் நவீன முறையில் கல்வி கற்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் முதன் முதலாக நமது பள்ளியில்தான் இத்தகைய வசதி உள்ளது என்பது நமக்கெல்லாம் பெருமை.
தொடர்ந்து மாவட்ட அளவில், படிப்பிலும், விளையாட்டிலும், பரிசுகளையும், வெற்றிக்கோப்பைகளையும் பெற்ற நம்பள்ளி - வருங்காலத்தில் மாநில அளவில் இடம் பிடித்து சாதனைப் படைக்க முயற்சிகளைத் தொடர்வோம். |